தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பு

*வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement

ஈரோடு : ஆடி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளிச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த வார ஜவுளிச் சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது.

இதில், கேரள வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். அதேபோல, தமிழ் நாட்டில் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அதிக அளவில் வந்திருந்து சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட வண்ண வேட்டி, சேலை, துண்டுகளை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். இதனால், இந்த வார ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் மொத்த வியாபாரம் மிக குறைவாகவே நடைபெற்றது.

அதே நேரம், வட மாநிலங்களில் வினாயகர் சதுர்த்தி, கேரளத்தில் ஓணம் உள்ளிட்ட பண்டிகள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான செட் சேலைகள், வேட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. இதனடிப்படையில் இந்த வார ஜவுளிச் சந்தையில் சில்லரை விற்பனை சுமார் 40 சதவீதமும் மொத்த விற்பனை சுமார் 30 சதவீதமும் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News