டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அன்பில் மகேஷ்
Advertisement
சென்னை: டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும். எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்
Advertisement