டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் தகவல்
சென்னை: ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வு கட்டாயம் என கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருந்தது. அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லை என்றால் கட்டாய ஓய்வு என்பது வழங்க படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கக்கூடிய நிலையில் இதனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் வேலைசெய்யக்கூடிய 1. 75 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இதனை தொடர்ந்து.ஆசிரியர் சங்கங்களை அழைத்து அண்மையில் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சரை அன்பில் மகேஷ் பொய்மொழி தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். அதனை தொடர்ந்து முதலமைச்சர், மற்றும் துணைமுதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனையில் டெட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மற்றும் அவருடைய வேலைக்கு ஏந்த வித சிக்கலும் இல்லாமல் இருப்பதற்காக தமிழக முதலமைச்சருடைய வழிகாட்டுதல் படி சீராய்வுமனு தாக்கல் செய்யபடும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்மொழி தெரிவித்துருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விரிவாக தெரிவித்துருக்கக்கூடிய கருத்தை பொறுத்தளவில் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்களுக்கான நீதி இரண்டையும் உறுதிசெய்வதில் தமிழக அரசு என்பது உறுதியாக இருக்கிறது. பணியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் சேவை உரிமைகளை பாதுகாப்பதின் மூலம் சமநிலையை அடைய மறுஆய்வு மனு என்பது நிச்சியமாக தேவைப்படுகிறது.
இதற்கு தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அனுக இருக்கிறோம். மேலும் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான அனைத்து வலிகளையும் நாங்கள் தற்பொழுது மேற்கொண்டுருப்பதாக தெரிவித்துருக்கிறோம் ஒரு பக்கம் இந்த உச்சநீதீமன்றம் தீர்ப்புகாரணமாக டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை என்பது இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்திருக்கிறது.
வருகிற நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி டெட் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் சிறப்பு டெட் தேர்வுகளை நடத்துவதற்கும் தமிழகஅரசு திட்டமிட்டு இருக்கக்கூடிய நிலையில் முதல் கட்டமாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வுமனுவை தற்பொழுது தாக்கல் செய் முடிவு எடுக்கபட்டது.