தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெஸ்ட் பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சிக்கல் ஆஸியுடன் மேலும் 4ல் இந்தியா வென்றால் உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு வாய்ப்பு

Advertisement

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப்படி இந்திய அணி தற்போது, 61.11 சதவீத வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பெர்த் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 295 ரன் வித்தியாசத்தில் கிடைத்த அபார வெற்றியால் இந்திய அணி முதலிடத்துக்கு உயர்ந்தது. அதேபோல், இலங்கை அணியுடன் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் போட்டியில் வென்று தென் ஆப்ரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை 3ம் இடத்துக்கு தள்ளி, 2ம் இடத்துக்கு முன்னேறியது. வரும் 2025 ஜூன் மாதம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இதில் இடம்பெற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பெற வேண்டும். அதற்கு, தற்போது நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸியை வென்றாக வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு உருவாகி உள்ளது. அப்படி இல்லையெனில், பட்டியலில் தனக்கு கீழ் இடம்பெற்றுள்ள அணிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில் சூழ்நிலை மாறும். ஆஸியுடன் இந்தியா மோதவுள்ள மீதமுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்தியா இருக்கும். ஆனால், இலங்கையுடனான 2வது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றால் இந்தியாவுக்கான வாய்ப்பு மங்கும்.

ஆஸியுடனான போட்டிகளில் 2ல் இந்தியா தோற்க நேரிட்டால், வரும் 2025ல் ஜனவரி - பிப்ரவரியில் ஆஸியுடன் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றில் இலங்கை டிரா செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஆஸியுடன் மீதமுள்ள போட்டிகளில் 3ல் இந்தியா தோற்க நேரிட்டால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை கவனித்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்தியாவின் வாய்ப்பு மங்காமல் இருக்க, இங்கிலாந்து - நியூசி இடையிலான டெஸ்ட் தொடர், 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமன் ஆக வேண்டும்; இலங்கை - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்யப்பட வேண்டும். அது மட்டும் அல்லாது, இலங்கை - ஆஸி இடையிலான போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிய வேண்டும்.

Advertisement

Related News