100வது டெஸ்டில் 100 வங்கதேச வீரர் சாதனை
டாக்கா: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில்விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வதுடெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 128 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 106 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின் மூலம் 100வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை ரகீம் பெற்றிருந்தார். 100வது போட்டியில் விளையாடிய ரகீம் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்த பட்டியலில் இடம்பிடித்த 11வது வீரர் என்ற பெருமையை பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரகீமின் 13வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்து உள்ளார். நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்தது. 3ம் நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது.