டெஸ்லா ரோட்ஸ்டர் கார் புக்கிங்கை ரத்து செய்தார் OpenAl நிறுவன அதிகாரி சாம் ஆல்ட்மேன்..!!
வாஷிங்டன்: டெஸ்லா ரோட்ஸ்டர் கார் புக்கிங்கை ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரத்து செய்துள்ளார். டெஸ்லா ரோட்ஸ்டர் என்பது 2008 ஆம் ஆண்டு முதல் டெஸ்லா மோட்டார்ஸால் விற்கப்படும் இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார். இதில் மூன்று-கட்ட நான்கு-துருவ மின் தூண்டல் மோட்டார், 200 கிமீ/மணிக்கு மேல் வேகம், மற்றும் 3.9 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வரை முடுக்கம், 3.92 கிமீ வரை பேட்டரி மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இத்தகைய, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் ரோட்ஸ்டர் காரை, 2018ஆம் ஆண்டு OpenAl நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் 45000 அமெரிக்க டாலருக்கு புக் செய்திருந்தார். 7.5 ஆண்டுகள் கடந்தும் கார் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், அவர் அந்த புக்கிங்கை ரத்து செய்து, அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து எலானின் மற்றுமொரு நிறுவனமான X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஈமெயில் ஐடி செயல்பாட்டில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
