டெஸ்லா மாடல் ஒய்
டெஸ்லா நிறுவனம் மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக மும்பையில் திறக்கப்பட்ட பிரத்யேக ஷோரூமில் இந்த அறிமுக நிகழ்வு நடந்தது. இந்தக் காரில் ஸ்டாண்டர்டு ரியர் வீல் டிரைவ் மற்றும் லாங் ரேஞ்ச் ரியல் வீல்டிரைவ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு வேரியண்டில் 63 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 299 எச்பி பவரை வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டும்.
முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என சான்றளிக்கப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 83 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 340 எச்பி பவரை வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் 622 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்ட்களும் அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.
சூப்பர் சார்ஜர் மூலம் 15 நிமிடம் சார்ஜ் செய்தாலே 267 கிமீ தூரம் செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. எல்இடி லைட், 19 அங்குல அலாய் வீல்கள், 15.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, உட்பட பல நவீன அம்சங்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.59.89 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.67.89 லட்சம். குரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட டிரைவர் அசிஸ்ட் அம்சங்கள் அடங்கிய ஆட்டோ பைலட் வசதி தேவைப்பட்டால் கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.