டெரிட்டோரியல் ஆர்மியில் 1425 சிப்பாய், குரூப் சி பணியிடங்கள்
1. சிப்பாய் (சோல்ஜர்):
i) ஜெனரல் டியூட்டி: 1372 இடங்கள். தகுதி: 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கிளார்க் (சிப்பாய்): 7 இடங்கள். தகுதி: பிளஸ் 2 வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம்/அக்கவுன்டன்சி/புக் கீப்பிங்/ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டிரேட்ஸ்மேன் (சிப்பாய்)
i) செப் கம்யூனிட்டி: 19 இடங்கள்.
ii) செப் ஸ்பெஷல்: 3 இடங்கள்.
iii) இஆர்: 3 இடங்கள்.
iv) ஸ்டாவார்டு: 2 இடங்கள்
v) ஆர்ட்டிசன் மெட்டலர்ஜி: 2 இடங்கள்.
vi) ஆர்ட்டிசன் வுட் வொர்க்: 2 இடங்கள்.
vii) ஹேர் டிரஸ்ஸர்: 5 இடங்கள்
viii) டெய்லர்: 1 இடம்
ix) ஹவுஸ் கீப்பர்: 3 இடங்கள்.
x) வாஷர்மேன்: 4 இடங்கள்.
xi) மெஸ்குக்: 2 இடங்கள்.
வயது: 18 முதல் 30க்குள்.
உடற்தகுதி: 1. குறைந்தபட்சம் 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி பிரிவினர்கள் 157 செ.மீ). மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ., இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
2. ஒரு மைல் தூரத்தை 5 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு டிரேடு தேர்வு, உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நவ.28ம் தேதி எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரம் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
https://www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.