களியல் அருகே பரபரப்பு: ரப்பர் சீட் உலையில் பயங்கர தீ
அருமனை: குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. களியல் அருகே கட்டச்சல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் உள் பகுதியில் ரப்பர் சீட் உலர் கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. ஒரு கட்டத்தில் தீ மளமளனெ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்போது பணியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலறின்து குலசேகரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து களியல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.