நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்
காத்மாண்டு: நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடையால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதிபர், பிரதமர், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் நேபாளத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்தது. அவசர உதவிக்கு 977 98086 02881, 98103 26134 ஆகிய எண்களில் இந்தியர்கள் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.