தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேன்கனிக்கோட்டையில் கறுப்புத் தாளை கெமிக்கலில் நனைத்தால் பணமாகும் என மோசடி

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் கறுப்புத் தாளை கெமிக்கலில் நனைத்தால் பணமாகும் என மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் செவிலியராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.

தேன்கனிக்கோட்டையில் அருகே ஒரு கிராமத்திலுள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று கோவில் பூசாரியாக ரவியிடம் குடும்ப கஷ்ட்டம் தீர சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரி ரவி, உங்களுக்கு உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. ஆனால் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியை பின்பற்றினால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என மாதம்மாளிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், பூசாரியிடம் கருப்பு பணம் உள்ளதாகவும், ரூ.10,000 கொடுத்தால் ரூ.20,000 திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கறுப்புத் தாள்களை கெமிக்கலில் நனைத்து எடுத்தால் உண்மையான பணம் போன்று இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மாதம்மாள் ரூ.40,000 பணத்தை பிரபுவிடம் கொடுத்துள்ளார்.

பிறகு ரூ.50,000 மதிப்புள்ள இரு கறுப்புத் தாள் கட்டுகளை மாதம்மாளிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து மாதம்மாள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று தாள்களை கெமிக்கலில் நினைத்தபோது, அது உண்மையான பணம் போன்று வரவில்லை என்பதை அறிந்தவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் பூசாரிக்கு உடந்தையாக இருந்த முனிகிருஷ்ணன், நஞ்சுண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related News