கரூரில் எத்தனை கோயில்கள் உள்ளன; சொத்து விவரங்கள் எவ்வளவு?.. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: கரூரில் எத்தனை கோயில்கள் உள்ளன என பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், பல நூற்றாண்டு தொன்மையானது, கரூரின் மையப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் அதில் கட்டப்பட்டுள்ளன. இந்த இடத்தை மீட்டு, கோயில் வருமானத்தை அதிகரித்தால்தான் கோயிலுக்கு கா ல பூஜை மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியும்.
எனவும் கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளிட்ட 64 கோயிலின் சொத்துகளை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; கரூரில் எத்தனை கோயில்கள் உள்ளன; சொத்து விவரங்கள் எவ்வளவு? கோயில்களின் சொத்துகள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது குறித்து கரூர் ஆட்சியர், இந்து அறநிலையத் துறை ஆணையாளர் ஆகியோர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 2015ல் காணாமல் போனதாக கூறும் கோயில் நிலங்களின் கோப்புகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. குறைந்தது 20 கோயில்களின் நிலை அறிக்கையாவது அடுத்த விசாரணையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.