கோயில் சொத்தை தனிநபருக்கு மாற்றும் சட்ட திருத்தத்திற்கு தடை நீட்டிப்பு
மதுரை: திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் கோயில் நிலங்களை பாதுகாக்கும் விதமாக கோயில் நிலங்களின் மதிப்பீட்டை பூஜ்ஜியம் மதிப்பீடு என பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்து வைத்திருப்பது வழக்கம்.
                 Advertisement 
                
 
            
        தற்போது கோயில் சொத்துக்களை தனிநபருக்கு பத்திர பதிவு செய்யும் வகையில் புதிய சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.
                 Advertisement 
                
 
            
        