மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!!
இந்த மனுக்கள் இன்று நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில்,"கடந்த பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைகாட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள. அதனை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும்.இதனால், கிராமம் செழிப்பாக இருக்கும்" என உத்தரவிட்டார்.