கோயில் நிதியில் கல்லூரி - எடப்பாடி பழனிசாமி பல்டி
Advertisement
விழுப்புரம்: கோயில் நிதியில் கல்லூரி தொடங்காமல் அரசு நிதியில் கல்லூரி தொடங்க வேண்டும் என்றே கூறினேன் என அறநிலையத்துறை நிதியில் கல்லூரி தொடங்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி புது விளக்கம் அளித்துள்ளார். அறநிலையத்துறை கல்லூரி வளர்ச்சி அடையும் போது நிதி ஒதுக்குவதில் சிரமம் என்றும், அரசு கல்லூரி வளர்ச்சி அடையும் போது அரசே நிதி ஒதுக்க முடியும் என்று பேசியதாக பழனிசாமி விளக்கம் அளித்தார். கோயில் நிதியில் கல்லூரி திறக்கப்படுவதன் பின்னணியில் சதி இருக்கலாம் என இபிஎஸ் பேசியிருந்தார். கோயில் நிதியில் கல்லூரிகள் கட்டுவதா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் வலுத்தது.
Advertisement