கோயில் ஊழியர்களுக்கு கலைமாமணி விருது முதல்வருக்கு கோயில் பணியாளர்கள் நன்றி
மதுரை: தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஷாஜிராவ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் முதுநிலைக் கோயில் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் என 100க்கும் மேற்பட்டவை உள்ளன.
அறநிலையத் துறையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் ஓதுவார் சற்குருநாதனுக்கு சிறந்த திருமுறை தேவார இசை கலைஞர் என்ற சிறப்பு விருதும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், நாதஸ்வர வித்வான் மோகன்தாசுக்கு சிறந்த நாதசுரக் கலைஞர் என்ற சிறப்பு விருதும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் தமிழ்நாடு முதல்வர் வழங்கி உள்ளார்.
கோயில் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இவ்விருது பெற்றது இதுவே முதல் முறையாகும். ஒரே சமயத்தில் இரண்டு கோயில் பணியாளர்கள் விருது பெற்றது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இது திருக்கோயில் பணியாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். விருதினை வழங்கிய முதல்வருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.