தமிழ்நாட்டில் 2 நாள்கள் வெப்ப நிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்ப நிலை அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement