தெலுங்கானாவில் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்திய மனைவியிடம் இருந்து கணவன் மீட்பு
01:50 PM May 04, 2024 IST
Share
தெலுங்கானா : தெலுங்கானாவில் சொத்து தகராறில் கணவனை சங்கிலியால் கட்டி வைத்து மனைவி கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மேட்சல் மாவட்டம் காட்கேசரில் கணவன் நரசிம்மாவை சங்கிலியால் கட்டிவைத்து மனைவி பாரதி கொடுமைப்படுத்தியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் செல்போனில் வீடியோ எடுத்து அனுப்பியதை அடுத்து பெண்ணின் கணவனை போலீசார் மீட்டனர்.