தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து: 17 பேர் உயிரிழப்பு; பலர் காயம்
ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடாவில் ஒரு ஆர்டிசி பேருந்தும் ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இதில் டிப்பர் லாரி பேருந்து மீது கவிழ்ந்தது. இதில் பேருந்தும் ஒருப்புறம் அமர்திருந்த பயணிகள் மீது ஜல்லிகற்களுடன் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் 70 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக செவெல்லா விகாராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டருக்கு போக்குவரத்தை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் மீதுள்ள ஜில்லி கற்கள் விழுந்ததில் பல பயணிகள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜேசிபி மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.