தெலுங்கானாவில் ஆளுநர் பரிந்துரை 2 எம்எல்சி நியமனம் ரத்து உச்ச நீதிமன்றம் அதிரடி
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் சார்பில் பேராசிரியர் எம். கோதண்டராம் மற்றும் அமீர் அலி கான் ஆகியோர் எம்எல்சியாக நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் எம்எல்சிக்களாக தனிநபர்களை பரிந்துரைக்கும் செயல்முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.