தெலங்கானாவில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
ஆந்திரா: ஆந்திராவில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம், போக்குவரத்து கழகம் சார்பில் தலா 2 லட்சம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை 4:45 மணிக்கு, விகாராபாத்தில் உள்ள தந்தூர் டிப்போவிலிருந்து ஹைதராபாத்திற்கு ஒரு ஆர்டிசி பேருந்து கிளம்பியது. ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடா அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பேருந்து மீது கவிழ்ந்தது. இதில் பேருந்தும் ஒருப்புறம் அமர்திருந்த பயணிகள் மீது ஜல்லிகற்களுடன் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் 70 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக செவெல்லா விகாராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டருக்கு போக்குவரத்தை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம், போக்குவரத்து கழகம் சார்பில் தலா 2 லட்சம் நிதியுதவி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.