தெலங்கானாவில் காலை உணவு திட்டம் ரேவந்த் ரெட்டி அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை: தெலங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி.
Advertisement
அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை கூடுதலாக பிரம்மாண்டமாக்கியது. நான் முதல்வன், புதுமை பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட எங்களின் முதன்மை திட்டங்களை பாராட்டியதன் மூலம் கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடி பாதை இந்தியா முழுவதிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்திவீட்டீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement