தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அமைய இருந்த செமி கண்டக்டர் ஆலையும் வேறு மாநிலத்துக்கு மாற்றம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அமைய இருந்த செமி கண்டக்டர் ஆலையும் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மோடி அரசு மீது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தெலுங்கானாவில் தொடங்க இருந்த ஆலையை, நிறுவனத்தை மிரட்டி ஆந்திராவில் தொடங்க ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க வியாழனன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.