தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் 37 நக்சலைட்கள் போலீசில் சரண்

ஐதராபாத்: தெலங்கானாவில் 37 நக்சலைட்கள் போலீசில் சரணடைந்துள்ளனர். நக்​சலைட்​கள் அனை​வரும் ஆயுதங்​களை கைவிட்​டு, வரும் மார்ச் மாத இறு​திக்​குள் போலீசில் சரணடைய வேண்​டும் என ஒன்றிய உள்​துறை அமைச்​சகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதற்​காக கடந்த ஏப்​ரல் 21ம் தேதி முதல் ‘ஆபரேஷன் ககார்’ அல்​லது ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் என்ற பெயர்​களில் நக்​சல்களை முற்​றி​லு​மாக ஒழிக்க ஒன்றிய பாது​காப்பு படைகளும், மாநிலங்​களின் ஆயுதப்​படை​யும் இணைந்து வனப்​பகு​தி​களில் பதுங்கியுள்ள நக்​சலைட்​களை கைது செய்​யும் நடவடிக்​கை​களில் ஈடு​பட்டு வரு​கிறன. இதனால் நக்​சலைட்​களுக்​கும் போலீ​சாருக்​கும் இடையே நடை​பெறும் துப்​பாக்கி சண்​டை​யில் பலர் கொல்​லப்​பட்டு வரு​கின்​றனர். சமீபத்​தில் ஆந்​தி​ரா​வில் நடந்த துப்​பாக்கி சூட்​டில் 13 நக்​சலைட்​கள் சுட்​டு ​கொல்​லப்​பட்​டனர்.

Advertisement

இந்​நிலை​யில் வனப்​பகு​தி​களில் பதுங்கியிருந்த 37 நக்​சலைட்​​கள் நேற்று ஐத​ரா​பாத்​தில் தெலங்​கானா மாநில டிஜிபி சிவதர் ரெட்டி முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து சரணடைந்​தனர். இவர்​களில் 34 பேர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்​தவர்​கள். 23 பேர் பெண்​கள். இவர்கள், தங்களிடம் இருந்த 8 துப்பாக்கிகள் மற்றும் 343 தோட்டாக்களை ஒப்படைத்துள்ளனர். இதில் ஒரு ஏகே-47 மற்றும் 2 எஸ்எல்ஆர் துப்பாக்கிகளும் அடங்கும். சரணடைந்த அனைவருக்கும் அரசு மறுவாழ்வு திட்டங்கள், சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான உதவிகள் மற்றும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று டிஜிபி உறுதியளித்துள்ளார். மேலும் இவர்​கள் அனை​வருக்​கும் பொது​மன்​னிப்பு வழங்​கு​வதோடு, உடனடி உதவி​யின் கீழ் தலா ரூ.25,000 நிதி உதவி​யும்​ வழங்​கப்​படுகிறது.

Advertisement

Related News