தெலங்கானாவில் பேக்கரியில் பப்ஸ் வாங்கிய பெண்: வீட்டுக்கு சென்று பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!
ஹைதராபாத்: வெஜ் பப்ஸ், முட்டை பப்ஸ், சிக்கன் பப்ஸ் என பலவகை பப்ஸ் சாப்பிட்டு இருப்போம். தெலங்கானாவில் புதுவிதமாக பாம்பு பப்ஸ் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் சாப்பிடும் பப்ஸ்க்குள் பாம்பு புகுந்தது எப்படி. தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் ஜெக்சர்லாவில் ஐயங்கார் பேக்கரி என அழைக்கப்படும் ஸ்ரீ லட்சுமி பேக்கரி உள்ளது. இதில் குழந்தைகளுக்காக ஸ்ரீசைலா என்ற பெண் முட்டை பப்ஸ் மற்றும் சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார் வீட்டுக்கு சென்று அந்த பப்ஸ் குழந்தைக்கு கொடுத்துள்ளார்.
குழந்தைகள் ஆர்வமாக பிரித்தபோது பப்ஸ்க்குள் வித்தியாசமாக எதோ இருந்துள்ளது. இதனால் அதனை குழந்தைகள் வீடியோ எடுத்தனர். ஸ்ரீசைலா பிரித்தபோது அதில் குட்டி பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசைலா, பாம்பு பப்ஸுடன் உடன் ஐயங்கார் பேக்கிரிக்கு சென்று உரிமையாளரிடம் இதை குறித்து கேட்டார். அவர் அலட்சியமாக பதில் அளித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேக்கரி உரிமையாளர் கடைசி வரை பிடிகொடுத்து பேசாததால் கோவமடைந்த ஸ்ரீசைலா போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பப்ஸை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்கும் அனுப்பினர்.
மேலும், உணவு பாதுகாப்புத்துறையினரும் பேக்கிரியில் ஆய்வு நடத்தி, உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குட்டி பாம்பு பப்ஸ்க்குள் இருந்ததால் அங்கு பெரிய பாம்பு இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதனால் பேக்கரிக்குள் பாம்பு பிடிப்பவர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பேக்கரியில் வாங்கிய பப்ஸ்க்குள் பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.