தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறுப்புடன் செயல்பட வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். அப்போது; சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கில், கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Advertisement

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பார்வையிட்டு, பயிற்சி பெறும் உதவிப் பொறியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்புரையாற்றினார்கள். பொதுப்பணித்துறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, 1858 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 166 ஆண்டுகளாக, பல தலைமைப் பொறியாளர்களின்கீழ், மக்கள் பயன்பாட்டிற்கு சேவை செய்து வருகிறது. முதல் தலைமைப் பொறியாளர் ஆர்தன் காட்டன். இத்துறை அனைத்து துறைகளுக்கும் தாய்த்துறை. இதற்கு முன்னர் மராமத்து துறை என்ற பெயரில் இருந்துள்ளது. அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “பொதுப்பணித்துறை“ என்று பெயர் சூட்டினார்.

அண்ணா அவர்களுக்குப் பிறகு பொதுப்பணித்துறைக்கு கலைஞர் அமைச்சராக இருந்தார். சிற்றூர் முதல் பேரூர் வரை, நகரம் முதல் மாநகரம் வரை, மாவட்டம் முதல் மாநிலம் வரை, எல்லா இடங்களிலும் கட்டடங்களை கட்டுவது மற்றும் அரசின் கட்டடங்கள், நினைவகங்கள், மருத்துவமனை கட்டடங்கள், கல்லூரி கட்டடங்கள் போன்றவற்றை பொதுப்பணித்துறையின் மூலம்தான் கட்டப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியடைந்துவிட்டால், வழக்கறிஞர்கள் மீது குறைகள் சொல்வதில்லை. நோயாளி இறந்து விட்டால், மருத்துவர்கள் மீது குறைகள் சொல்வதில்லை. மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், ஆசிரியர்கள் மீது குறைசொல்வதில்லை. ஆனால், கட்டடங்கள் கட்டினால், பொறியாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு பொறியாளரும், வாழ்க்கையில் இலக்கு அமைத்துக் கொண்டால்தான், முன்னேற முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொதுப்பணித்துறையின் நிர்வாக அமைப்பினை தெளிவாக விளக்கி கூறினார்.

பொறியாளர்கள், வரைதொழில் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 8.5.2023 முதல் இதுநாள் வரை நடத்தப்பட்ட 28 பயிற்சி வகுப்புகள் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 70க்கும் மேற்பட்ட சிறப்பு விரிவுரையாளர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்கள்.

பொதுப்பணித்துறை அமைப்பு மற்றும் செயல்பாடுகள், கட்டுமானப் பொறியியல் திறனை மேம்படுத்துதல், பொதுப்பணித்துறையின் தரக்கட்டுப்பாடு பிரிவின் செயல்பாடுகள், ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள், கட்டட அடித்தள அமைப்பது தொடர்பான பயிற்சிகள், கட்டட வடிவமைப்புப் பயிற்சி, கட்டுமானப் பணித் தொடர்பான நேரடி களஆய்வு, பணித்தள வரைப்படம், மதிப்பீடு, நிர்வாக ஒப்புதல், M-Book பயன்பாடு குறித்து பயிற்சி, பாரம்பரிய கட்டட புனரமைப்பு குறித்த பயிற்சி, PT Beam மற்றும் PT Slab குறித்தப் பயிற்சி, கட்டுமான பொருட்கள் பயன்பாடு மற்றும் தரஆய்வு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருகிறது என்பதை குறிப்பிட்ட அமைச்சர். அனைத்து உதவிப் பொறியாளர்களும், பயிற்சியின் அடிப்படையில் திறமையாக பணிபுரிய வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் கேட்டுக் கொண்டார்கள்.

ஒரு பணித்தளத்தில், பாதுகாப்பு மீறல், தொழிலாளர்கள் ஹெல்மெட் இல்லாமல் வேலை செய்தல் போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி “S T A R’’ அணுகு முறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பொறியாளர்கள் மேன்மேலும் படித்து, அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பல துறைகளின் கட்டுமானப் பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்பாட்டுத்துறையின் தேவையின் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். பயன்பாட்டுத் துறையுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.

உதவிப் பொறியாளர்கள், முதற்கட்டப் பணிகளாக, மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை, அஸ்திவாரம் பணிகளின்போது பூச்சி தடுப்பு முறை (Pest Control), கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை, உப்பு நீரை தவிர்த்தல், சாம்பல் நிறத்துடன் சிமெண்ட் உள்ளதா என்பதை பரிசோதித்தல், மணல் தூசி துரும்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், கான்கீரிட்டுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் துரு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுதல் அனைத்து பணிகளும் வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரம் அடிப்படையில் பணி நடைபெறுவதை உறுதி செய்தல். பணிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தொழிலாளர்களை கண்காணித்தல், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க உறுதிசெய்தல் போன்றவற்றை உதவிப் பொறியாளர்கள் பொறுப்புடன் செயல்படுத்துவது அவசியம் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்களும், பொறியாளர்களும் உடனிருந்தனர்.

Advertisement

Related News