தொழில்நுட்ப கோளாறு.. உத்தரகாண்டில் திடீரென சாலையில் தரையிறக்கப்பட்ட பயணிகள் ஹெலிகாப்டர்..!!
Advertisement
ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது. இருப்பினும், பைலட்டின் சாதுர்யத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறக்கிய போது சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது ஹெலிகாப்டரின் வால் பகுதி உரசி சேதமடைந்தது. உள்ளூர் நிர்வாகம், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பி, ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது. இருப்பினும் சாலையில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
Advertisement