ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம். ஓய்வுபெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதிபெற வேண்டும். டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் ; அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement