ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு
தேர்வு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஎன்டிஇடி- 2025).
வயது: 01.07.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் பி.எட், முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பணிக்கான 2 வருட தொடக்கக் கல்வி பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் டிஎன் டெட் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வெழுதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியும் தகுதியைப் பெறுவர். பிளஸ் 2 படித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் டிஎன்டெட் தாள்-1 மட்டும் எழுத அனுமதிக்கப்படுவர். அவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘ஆப்ஜக்டிவ்’ டைப் கேள்விகளைக் கொண்ட ‘டிஎன்டெட்-2025’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. டிஎன்டெட் தாள்-1 தேர்வு நவ.1ம் தேதியும், தாள்-2 தேர்வு நவ.2ம் தேதியும் நடைபெறும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2025,