"புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரியே காரணம்" அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.