தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரி இறால் பராமரிப்பு முறைகள்!

வளர்ப்பு இறால்களில் வனாமி இறால்களும், வரி இறால்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் வரி இறால்கள் கடலில் இருந்து சினையாக பிடிக்கப்பட்டு, கரைக்குக் கொண்டு கொண்டுவந்து பிரத்யேகத் தொட்டிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பின்னர் அவை பொரிக்கும் குஞ்சுகளை முறையாக வளர்த்து விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சினை இறால்களை தொட்டிகளில் அடைத்து பராமரிக்கும் முறை குறித்து விளக்குகிறார் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரத்தில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவரும், உதவிப் பேராசிரியருமான விஜய் அமிர்தராஜ்.இறால் வளர்ப்பில் சினை இறால்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு பல்வேறு செயல்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு தரமான குஞ்சு இறால்கள் பெறப்படுகின்றன.

Advertisement

சினை இறால்கள் இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முன் வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உள்ளதா? அல்லது தாக்கப்படும் சூழ்நிலையில் கிருமிகளைத் தாங்கி உள்ளதா? என்று கண்டறிய சினை இறால்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு (பி.சி.ஆர்) உட்படுத்தப்படுகின்றன. குஞ்சு பொரிப்பகங்களிலும், சிறு பண்ணைகளிலும் பராமரிக்கப்படும் சினை இறால்களும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சினை இறால்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில காலம் (30 நாட்கள்) தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் சினை இறால்கள் நன்கு முதிர்ச்சி அடைந்ததாகவும், ஆரோக்கியமான இறால்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சினை இறால்களின் உடற்-வேதியியல் காரணிகள் (உப்புத்தன்மை, வெப்பநிலை), அவை வளர்க்கப்பட்ட சூழ்நிலை மற்றும் இடம் ஆகியவற்றைப் பொருத்து இருப்பதால் அவற்றின் தன்மையை வெகுவாக பிரதிபலிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சினை இறால்களில் இருந்து பெறப்படும் இறால் குஞ்சுகள் அதே வட்டாரத்தில் உள்ள பண்ணை களில் இருப்பு செய்யப்படுகிறது.

சினை இறால்கள் சில வேளைகளில் இயற்கை சூழலில் இருந்தும் பெறப்படுகின்றன. பெரும்பாலான இறால் குஞ்சு பொரிப்பகங்களும் இயற்கை சூழலில் பெறப்பட்ட சினை இறால்களைத் தேர்வு செய்கின்றன. இதன்மூலம் நல்ல தரமான, திடமான குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இயற்கை சூழலில் உள்ள சினை இறால் களில் நோய்க்கிருமிகளின் தொற்றுதலுக்கான அபாயம் உள்ளதால் சினை இறால்கள் தனிமைப்படுத்தப்பட்ட, இனப்பெருக்கத்திற்கு தயார் செய்யப்பட்ட சினை இறால்களை குஞ்சு பொரிப்பகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதற்கு சினை இறால்கள் நன்கு முதிர்ச்சி அடைந்ததாகவும், குஞ்சு பொரிப்பகங்களின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், திடமானதாகவும் இருத்தல் வேண்டும்.

சினை இறால்கள் தனிமைப்படுத்தப் படும் தொட்டிகள்:

* சினை இறால்களை தனிமைப்படுத்தும் தொட்டிகளின் அறையானது நாலா பக்கமும் நன்கு மூடப்பட்டு வெளிப்புற தொடர்பின்றி அமைத்தல் வேண்டும்.

* இத்தொட்டிகளின் கூடத்தில் கிருமி நாசினியாக ஹைட்போ குளோரைட்டும் (350 பி.பி.எம்), நடைபாதை மற்றும் உபயோகப்படுத்தும் உபகரணங்களுக்கு ஐயோடினும் (20 பி.பி.எம்) உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

* இந்த அறைகளில் தனியாக நீரை உள் மற்றும் வெளியேற்றும் குழாய் இணைப்புகள் பொருத்தப்பட வேண்டும்.

* தனிமைப்படுத்தப்படும் தொட்டிகளில் உபயோகப்படுத்தப்படும் கடல் நீரானது முதலில் 20 பி.பி.எம் கொண்ட ஹைப்போ குளோரைட் கிருமி நாசினி கலக்கப்பட்டு 30 நிமிடங்கள் அப்படியே வைக்கப்பட வேண்டும். பிறகு சினை இறால்கள் இருப்பு செய்யும் முன் சோடியம் தயோசல்பேட் கரைசல் (1 பி.பி.எம்) அளிக்க வேண்டும்.

* தொட்டிகளில் இறால்களுக்கு காற்றூட்டிகள் கொண்டு நல்ல உயிர்வளி அளிக்கப்பட வேண்டும்.

v கழிவுநீர் தனியாக ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு அதில் 20 பி.பி.எம் கொண்ட குளோரின் சேர்க்கப்பட்டு பின்பு வெளியேற்றப்பட வேண்டும்.

* இறந்து போன சினை இறால்களை குழி வெட்டி புதைத்து விட வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்டு நன்கு இனப்பெருக்கத்திற்கு தயார் செய்யப்பட்ட இறால்களில் குறியீடுகள் குறிக்கப்பட்டு சில நாட்கள் வளர்க்க வேண்டும்.

* சினை இறால்கள் மொத்தமாக பெறப்படும் பட்சத்தில் அவற்றில் இருந்து சில தொகுப்புகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொட்டியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிறகு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சினை இறால்களின் ஆரோக்கியம் முழுமையாக உறுதி செய்யப்படும் வரையில் அவற்றை தனிமைப்படுத்தும் தொட்டிகளில் இருந்து வெளியேற்றக்கூடாது. சினை இறால்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றாற்போல் தனிமைப்படுத்தும் நாட்களை அதிகப்படுத்த வேண்டும். மேற்கண்ட முறைகளில் பராமரிக்கப்பட்ட சினை இறால்கள் நன்கு முதிர்ச்சி அடைந்தவுடன் இனப்பெருக்க தொட்டிகளுக்கு மாற்றப்படுகிறது. இதன் விவரங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.

தொடர்புக்கு:

முனைவர் - விஜய் அமிர்தராஜ்:99944 50248.

 

Advertisement

Related News