டாடா ஏஸ் கோல்டு பிளஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஏஸ் கோல்டு பிளஸ் என்ற பெயரில் பிக்-அப் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது. டாடா ஏஸ் வரிசையில் அறிமுகம் ஆகியுள்ள இதில் உள்ள டர்போ சார்ஜ்டு டிகார் இன்ஜின் 22 பிஎஸ் பவரையும் 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 900 கிலோ வரையிலான சுமையை இழுக்கும் திறன் கொண்டது. இதில் லீன் என்ஓஎக்ஸ் டிராப் தொழில்நுட்பம் உள்ளது.
Advertisement
இது பராமரிப்பு செலவு மற்றும் இயக்கச் செலவைக் குறைக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.5.52 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது சந்தையில் உள்ள டாடா ஏஸ் வரிசையில் விலை குறைவான மினி டிரக் என்ற பெயரை இது பெற்றுள்ளது.
Advertisement