தஞ்சையில் கோடை மழையால் 1,000 ஏக்கர் பயிர் அழுகி நாசம்: விவசாயிகள் வேதனை
Advertisement
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்தோம். அறுவடை நேரத்தில் பெய்த மழையால் நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடியாததால் பயிர்கள் மழை நீரில் அழுகத் தொடங்கிவிட்டது. அப்படியே அறுவடை செய்தாலும் பாதிக்கு பாதி சேதம் தான். இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
Advertisement