கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
                 Advertisement 
                
 
            
        சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துளளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கியது எல்காட். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கியது எல்காட். மடிக்கணினி மாடல் மற்றும் தொழில்நுட்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து இறுதி செய்தார். வரும் மார்ச் மாதத்துக்குள் 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ய திட்டம்.
                 Advertisement 
                
 
            
        