தமிழக வளர்ச்சிக்கு காரணமான திராவிட மாடல் மீது சிலர் அவதூறு பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Advertisement
சென்னை: தமிழக வளர்ச்சிக்கு காரணமான திராவிட மாடல் மீது சிலர் அவதூறு பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவதூறுகளைப் புறந்தள்ளி பயணத்தை திமுக அரசு தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சி முறை, மாநில உரிமை காக்கப்பட திமுக அரசு தொடர்ந்து போராடுகிறது. வளமான, வலிமையான இந்தியா உருவாக மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநில அரசுகள் தம் வளர்ச்சிப் பாதையை தாங்களே வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கவேண்டும். கல்வி, மருத்துவம் மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement