தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்: 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகிறது

சென்னை: கடந்த 2016 மற்றும் 2021 மற்றும் 1019 தேர்தல்களில், சில இடங்களில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனாஉள்ளிட்ட பொருட்கள் தாமதம் மற்றும் குறைவாக வந்தது, இந்த அனுபவத்தின்படி வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து பொருட்களையும் முன்பே கட்டுப்பாட்டுடனும், தர நிர்ணயத்துடனும் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement

அதன்படிபேரவை தேர்தலில் 70,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்கு நிலையத்துக்கும் குறைந்தது 4 முதல் 5 அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான அலுவலகப் பொருட்கள் அனைத்தும் முன்கூட்டியே தொகுப்புகளாக வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான நுகர்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து, பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன்படி ரூ.26.37 லட்சத்திற்கு டிராயிங் பேனா, 1,05,480 ரப்பர் ஸ்டாம்ப் பேட்டுகள், ரப்பர் ஸ்டாம்ப் மை குப்பி 1,05,480 கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், கட்டுப்பாட்டு கருவிகளையும் பாதுகாப்பாக மூடவும், எடுத்துச் செல்லவும் 70,000 பிளாஸ்ட்டிக் அட்டை பெட்டிகள்,

பென்சில்கள், பேனாக்கள், பேப்பர், பிளாஸ்டிக் கப், சிலிப்புகள், படிவங்கள் உள்ளிட்ட அலுவலகப் பொருட்கள் வாங்க ரூ.7 கோடியில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. சில வாரங்களில் தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீடுகள் நடைபெற உள்ளது. ஜனவரிக்குள் கொள்முதல் முடித்து, மாவட்டங்களுக்குப் பொருட்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement