சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடிக்கு எதிரான வழக்கில் அக்கட்சி தலைவர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு குறித்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அக்கட்சித் தலைவர் விஜய் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் பச்சையப்பன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் சபையின் சின்னம் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறம் என பதிவுத்துறையில் பதிவு செய்யபட்டுள்ளது. ஏற்கெனவே தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் வழக்கு தொடர்ந்திருந்தது.