தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வாக ரூ.4,144 கோடியை விடுவித்தது ஒன்றிய நிதி அமைச்சகம்!
டெல்லி: பண்டிகைக் காலம் வருவதை ஒட்டி மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,01,603 கோடியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வாக ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வரிப் பகிர்வாக ரூ.18,227 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10,219 கோடியை வரிப் பகிர்வாக விடுவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.7,976 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.6,418 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்துக்கு ரூ.1,956 கோடியும், தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.2,136 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement