தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்: அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி கொளுத்திய வெயில்..! மக்கள் தவிப்பு
நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 5 தினங்களை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கிய 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.