தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் 1 லட்சத்தில் 100 பேருக்கு பக்கவாதம்: இளைஞர்களிடையே தொப்பையால் பக்கவாதம் அதிகரிப்பு; மருத்துவர்கள் தகவல்

* புரதச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்

Advertisement

* 4 1/2 மணிநேர கோல்டன் ஹவர்ஸ்

* சிறப்பு செய்தி

மனிதனின் வாழ்க்கை முறை மாற்றம் அடைந்து வருவதால் பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் மரணத்தின் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணமே அதுபற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான். குறிப்பாக பக்கவாதத்தின் அறிகுறிகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. மூளைக்குள் ரத்தம் உறைவது, ரத்த அடைப்பு, ரத்தம் செல்வது தடைபடுவது போன்ற காரணங்களால் இந்த பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை திசுக்களில் உள்ள நரம்பு செல்கள் நினைவாற்றல், உடல் இயக்கம் மற்றும் பேச்சு ஆகிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். பக்கவாதம் உண்டாகும்போது இந்த நரம்பு செல்கள் காயமடையும் அல்லது இறக்கும். இதனால் கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அசைக்க முடியாத நிலை ஏற்படும்.

பக்கவாத நோய் மூன்று நிலைகளைக் கொண்டது. தற்காலிக பக்கவாதம், தொடர்ந்து வரும் பக்கவாதம், முடிவில்லாத பக்கவாதம். இதில் முதல் நிலையான தற்காலிக பக்கவாதம், அதிக நேரம் இருக்காது, சில நிமிடங்களில் சரியாகிவிடும் என்றாலும், எதிர்காலத்தில் கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்த இது ஒரு அறிகுறியாகும். இரண்டாவது நிலையில் ரத்தக்குழாய்களில் கட்டி தோன்றி, மூளையை பாதிக்கும். மூன்றாவது நிலையான, முடிவில்லாத பக்கவாதம் மிகவும் அபாயகரமானது. ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பின் அளவிற்கேற்ப, பாதிப்பும் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

குறிப்பாக 70 சதவீதம் மக்களுக்கு ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதமும், 20 சதவீதம் மக்களுக்கு ரத்த கசிவால் ஏற்படும் பக்கவாதமும், இரண்டிலிருந்து ஐந்து சதவீத மக்கள் வெயின் மூலம் ஏற்படும் பக்கவாதத்தால் (vein stroke) பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என இந்திய பக்கவாதம் சங்கம் தெரிவித்துள்ளது. பக்கவாதம் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை சிறிய துளை மூலம் அகற்றுவதற்கான தொழில் நுட்பமும் தற்போது வந்து விட்டது. எனவே மக்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் அக்டோபர் 29 தேதி உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் கொண்டப்படுகிறது.

இது தொடர்பாக ரேலா மருத்துவமனை நரம்பியல் துறை நிபுணர் டாக்டர். சங்கர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: பக்கவாத பாதிப்பு கொரோனாவிற்கு பிறகு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுவாக வயதான நபர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருப்பதால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும், ஆனால் இளைஞர்களுக்கு அப்படி இல்லை. ரத்தம் உடலில் இருக்கும் போது நீர்ம வடிவமாகவும் வெளியில் வரும் கட்டியாக ஆகும். எனவே நீர்ம வடிவில் வைத்து இருக்க ஒரு வகையான புரத சத்து வேண்டும், அது குறைந்தால் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும்.

முறையாக தூக்கம் இல்லாதது, எண்ணெயால் வறுக்கப்பட்ட உணவு அதிகமாக எடுத்துக் கொள்வது, அது மட்டும் இன்றி உடல் உழைப்பு குறைவு, சத்தான உணவு எடுத்துக் கொள்ளாதது என பல்வேறு காரணங்களால் இந்த பக்கவாதங்கள் ஏற்படுகிறது. பி எம் ஐ சரியாக இருந்தாலும் வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பு (தொப்பை) காரணமாக இந்த பக்கவாதம் வர அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக காரபோஹைடரேட்டுகள் அதிகமாக எடுத்துகொள்கிறோம் அதனை குறைத்து புரத சத்து உள்ள உணவை எடுத்துகொள்ள வேண்டும்.

2023ம் ஆண்டும் மேற்கொண்ட ஆய்வு படி, உலக அளவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4 நபர்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பக்கவாதம் ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வருகிறது இருப்பினும் மற்ற மாநிலத்தை விட பாதிப்பு குறைவு தான். தமிழகத்தில் 1 லட்சம் நபர்களில் 100 பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. எனவே பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பு பல்வேறு அறிகுறிகள் வரும், குறிப்பாக கை மறுத்துப் போவது, கண் திடீரென தெரியாமல் போவது என அறிகுறிகள் தென்படும்.

இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். தற்போது ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த துறைக்கு அதிகமாக பயன்படுகிறது. ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தால் அவரை பரிசோதனை செய்தி மருத்துவர்களுக்கு தனி தனியாக காட்ட 20 நிமிடங்கள் ஆகும். தற்போது ஏஐ மூலம் அனைத்து மருத்துவர்களுக்கு ஒன்றாக பரிசோதனை முடிவுகள் சென்று விடுவதால் சிகிச்சை எளிதல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* பயிற்சி மற்றும் மருத்துவம் எடுத்துகொள்ள வேண்டும்

பக்கவாதம் ஏற்படும் போது கை கால் செயல் இழந்து விடும் அது மட்டுமின்றி பேச்சுக் குறைபாடு ஏற்படும். குறிப்பாக 20 முதல் 40சதவீத நபர்களுக்கு இந்த பேச்சு குறைபாடு என்பது ஏற்படுகிறது. இந்த பேச்சு குறைபாடு ஏற்படுவது என்பது நான்கு வகையாக உள்ளது. எந்த வகையாக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும். அதேபோல கை, கால் செயலிழந்தவர்களும் தொடர்ந்து பிசியோதெரபி தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த பக்கவாதமும் சரி செய்ய முடியாது என்று நிலை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

* பக்கவாத அறிகுறிகள்

உடலின் ஒரு பகுதியை நகர்த்த முடியாமல் போவது, உடல் பலவீனம், உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் உணர்வின்மை, பேசுவதில் சிரமம், புரிதலில் குழப்பம், பார்வை குறைபாடு, ஞாபக மறதி, திடீர் உணர்வு மாறுபாடு போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாத அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

* பக்கவாதத்தை தடுக்கும் வழிகள்

உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் பாதிக்காதவாறு, உடலையும், மனதையும் வைத்துகொள்ள வேண்டும். புகை, மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

* அரசு மருத்துவ மனையில் சிகிச்சை

பக்கவாதம் பாதிக்கப்பட்டால் 4 1/2 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அவர்களை முழுமையாக குணப்படுத்தலாம். பக்கவாதம் ஏற்படும் பொழுது வீட்டில் வைக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் நோயாளிக்கு ஏற்றார் போல் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு என்ன பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள ஊசி செலுத்தப்படும். எனவே காலம் தாழ்த்தாமல் பக்கவாதம் பாதிக்கப்பட்ட 4 1/2 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை கோல்டன் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும்.

Advertisement