தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
10:33 AM Jun 08, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் 23 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், தஞ்சை எம்.பி.முரசொலி உள்ளிட்டோர் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள கவுன்சில் நுகர்வோர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்.