தமிழக பள்ளிகல்வித்துறைக்கு அமெரிக்க குழு பாராட்டு
இந்த குழுவில் பிலடெல்பியா செவன்டி குழு தலைமை நிர்வாக அதிகாரி லாரன் கிறிஸ்டெல்லா, கிளீவ்லேண்ட், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஜூலியட் கோஸ்ட்ரிட்ஸ்கி, கொலம்பஸ் ஓகியோ பிரதிநிதிகள் சபையின் சட்ட மன்ற உதவியாளர் பிரியாமெய்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றலை குறைத்தது, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமத்துவம் மற்றும் சமூக உணர்வுகளை உள்ளடக்கிய பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய உத்திகள் மூலம் பொதுக்கல்வியை மாணவர்களுக்கு வழங்கும், பள்ளிக்கல்வித்துறையின் உறுதிப்பாட்டை அமெரிக்க பிரதிநிதிகள் பாராட்டினர். உள்ளூர் பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதற்கும், சமூகத்தை மையப்படுத்திய கற்றலை ஊக்குவிப்பதற்கும், அனைத்து மட்டங்களிலும் பள்ளித் தலைமையை வலுப்படுத்துவதற்கும் தமிழ்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை குழுவினர் மிகவும் பாராட்டினர்.