சென்னை: தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. 3,268 கிலோ மீட்டர் நீளத்திற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை. தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.