தமிழ்நாட்டில் 29ம் தேதி வரை மழை நீடிக்கும்
Advertisement
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.
அது தவிர நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும், நீலகிரி, தேனி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். இதேநிலை 29ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement