தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பு: தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும்
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது 16ம் தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், சிவகங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று ஒரு சில இடங்்களில் கனமழை பெய்துள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரையில் கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை,ம துரை திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், வேலூர், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இயல்பைவிட மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலை 99 டிகிரி இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கிமீ வேகத்திலும், தென் மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் 14ம் தேதி வரை வீசும்.