தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பெண்கள் உள்பட 3 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது: ஒன்றிய உள்துறை அமைச்சம் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பெண் உள்பட 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணி விருதும், 21 பேருக்கு குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருதுகள் என மொத்தம் 24 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான வீரதீர சேவைக்கான விருது, மிக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது மற்றும் மெச்சதக்க சேவைக்கான விருது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சார்பில் குடியரசு தலைவரின் தகைசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் மாநிலம் வாரியாக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 200 காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பால நாகதேவி, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்தியேன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி லட்சுமி ஆகிய 3 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான விருது தமிழகத்தை சேர்ந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் எஸ்பி ஜெயலட்சுமி, சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா, சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்பிரிவு டிஎஸ்பி துரைப்பாண்டியன், திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி கோபாலசந்திரன், சென்னை சிறப்பு பிரிவு, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் எஸ்பி சுதாகர் தேவசகாயம்,

கோவை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர், தாம்பரம் மாநகர சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசில், சென்னை பெருநகர ஆயுதப்படை டிஎஸ்பி முருகராஜ், சென்னை பெருநகர தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன், திருநெல்வேலி தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் அதிசயராஜ், வேலூர் மாவட்டம் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜனிகாந்த், ஈரோடு சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பா.ரஜினிகாந்த், சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஸ்ரீவித்யா,

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் அனந்தன், பெரம்பலூர் மாவட்டம் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கண்ணுசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், சென்னை சிறப்பு புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு உதவி ஆய்வாளர் கணேசன், சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் என மொத்தம் 21 அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News