தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை ஒரு நாளுக்கு முன்பாக தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு, நீலகிரி, கோவை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்குள் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.