தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓ.பி.எஸ்-க்கு பாஜக அழைப்பு
03:29 PM Aug 09, 2025 IST
சென்னை : நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓ.பி.எஸ்-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. உரிமை மீட்புக் குழுவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஓ.பி.எஸ் தகவல் அளித்துள்ளார்.