ராமேஸ்வரம் அருகே நடைபெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு
08:10 AM Jun 09, 2025 IST
ராமேஸ்வரம்: உச்சிப்புளி அருகே காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த வெங்கடேஸ்வரன், வேனில் வந்த மகாலட்சுமி ஆகியோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.