அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் ராமநாதபுரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ராமநாதபுரம்: திராவிட மாடல் 2.0.க்கு ரெடியா? உலகையே இந்தியாவை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அப்துல் கலாம் பிறந்த ஊர் ராமநாதபுரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் ராமநாதபுரம். 2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ராமநாதபுரத்தை தண்ணீர் இல்லா காடு என்று சொல்வார்கள். கலைஞர் உத்தரவின்படி ராமநாதபுரத்தில்...
திமுகவின் தேர்தல் அறிக்கையை மகளிர், விவசாயிகள் என அனைவரும் வரவேற்கின்றனர்: பிரேமலதா!
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை மகளிர், விவசாயிகள் என அனைவரும் வரவேற்கின்றனர் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். பிரச்சார கூட்டத்தில் அரசியல் மாண்பு காத்து கண்ணியத்துடன் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும். முதலமைச்சர் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது வருத்தம் அளிக்கிறது. ...
அணைக்கட்டு பகுதியில் தபால் வாக்கு பெறுவதில் முறைகேடு செய்ததாக 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!
வேலூர்: அணைக்கட்டு பகுதியில் தபால் வாக்கு பெறுவதில் முறைகேடு செய்ததாக 2 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி மண்டல அலுவலர்கள் நாகலிங்கம், வேல்முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தபால் வாக்கு பெறும் பணியின்போது துணை ராணுவ வீரர் ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
5.73 கோடி வாக்காளர்களை சென்றடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அடுத்த ஐந்து நாட்களில் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ‘பூத் சிலிப்’...
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்!
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்டோர் தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். ...
கோவை சூலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமாரிடம் பெண்கள் சரமாரி கேள்வி
கோவை: கோவை சூலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமாரிடம் பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். வார சந்தையில் பெண்களிடம் தவெக வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தவெக வேட்பாளர் பரப்புரை செய்தனர். சொந்த குடும்பத்தையே பார்க்காத விஜய், மக்களை எப்படி...
இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கழக உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன். ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின்...
தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சிறப்புத் தபால் வாக்குப்பதிவு மூன்று நாட்களுக்கு நடைபெறும் தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் 11...
மங்களூரு - சென்னை எழும்பூர் இடையே பயணிகள் வசதிக்காக வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்!
மங்களூரு - சென்னை எழும்பூர் இடையே பயணிகள் வசதிக்காக வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கமாக வரும் 21ம் தேதி சென்னையில் இருந்து மங்களூருக்கு இந்த ரயில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...